மதுபானம் என நினைத்து விசத்தை குடித்த கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி
ஹம்பாந்தோட்டை (Hambantota) தங்காலை கடலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் மதுபானம் என நினைத்து போத்தலில் இருந்த விசக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28.06.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கரைசலை குடித்த மேலும் மூன்று கடற்றொழிலாளர்கள் மோசமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தகவல் அனுப்பும் இயந்திரங்கள்
தங்காலை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற 'டெலோன்' என்ற படகில் இருந்த 6 பேரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதேவேளை, படகில் இருந்த தகவல் அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக குறித்த செய்தி கரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri