இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவித்தல்
இலங்கையால் (Sri Lanka) கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைச் சிறை
சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 24ஆம் திகதி இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டையும் எதிர்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அவர்கள் நிலைமையை அறிந்திருப்பதாகவும், இலங்கை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ரந்தீர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2024ம் ஆண்டின் இதுவரையான காலத்தில் மாத்திரம், 203 கடற்றொழிலாளர்களும் 27 படகுகளும் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜூன் 26 நிலவரப்படி, 34 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
மேலும் 6 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam