கனேடிய பள்ளி மாணவர்களுக்காக ஜஸ்டின் ட்ரூடோ எடுத்துள்ள தீர்மானம்
கனடாவில் (Canada), வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்பினை கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மதிய உணவுத் திட்டம்
இந்த திட்டம் தொடர்பில் கனேடிய பிரதமர், “நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம்.
பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள்.
ஆகவே, வரும் கல்வியாண்டிலிருந்து கனடா பள்ளிகளில் கூடுதலாக, 400,000 பிள்ளைகளுக்கு சத்துள்ள மதிய உணவு வழங்க, கனடா பெடரல் அரசு முடிவு செய்துள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் இல்லாத ஒரே G7 நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |