ஈரான் துணை தூதரகத்தை முற்றாக அழித்த இஸ்ரேல் : திசைமாறுகிறதா காசா யுத்தம்..!
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணை தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஈரான் படையின் மூத்த அதிகாரிகள் இருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு
காசா போரை அடுத்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
காசா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் போராளிகளுக்கும், லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் ஈரான் ஆதரவு வழங்கியதே இதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |