காசாவில் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் 7 நிவாரணப் பணியாளர்கள் பலி
காசா பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய வான் வழித்தாக்குதலில் 7 நிவாரணப் பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு காஸா பகுதியில் தனது நாட்டின் படைகளின் தற்செயல் தாக்குதலில் இந்த 7 பேரும் பலியானதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்
இதன்போது பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் ஆண்ட்ரேஸால் நிறுவப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேல்ட் சென்றல் கிச்சன் என்ற இலாப நோக்கமற்ற குழுவின் பணியாளர்களே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இந்த மரணத்திற்கு காரணம் என்ன என்பதை உறுதிப்படுத்தவில்லை. எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பிப்பதாக மாத்திரம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |