முடிவுக்கு வரும் கனேடிய பிரதமரின் திருமண வாழ்வு
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளனர்.
18 ஆண்டு திருமண வாழ்வின் பின்னர் அர்த்தபூர்வமானதும், கடினமானதுமான உரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர மரியாதை காணப்படுவதாகவும், ஆழமான அன்பு தொடர்வதாகவும்,பிள்ளைகளின் நலனைக் கருத்திற் கொண்டு தங்களது அந்தரங்க உரிமையை மதிக்குமாறு ட்ரூடோ தம்பதியினர் கோரியுள்ளனர்.
விவாகரத்திற்கான ஆவணங்களில் ட்ரூடோ தம்பதியினர் கையொப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் பியே ட்ரூடோவின் புதல்வரான ஜஸ்ரின் ட்ரூடோ தொலைக்காட்சி பிரபலமான ஸோபெய் கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி கரம் பிடித்தார்.
கனடாவில் பதவியில் இருக்கும் போதே விவகாரத்தினை அறிவித்த இரண்டாவது பிரதமராக ஜஸ்ரின் ட்ரூடோ கருதப்படுகின்றார்.
இதற்கு முன்னர் டரூடோவின் தந்தை பியே ட்ரூடோவும் பதவி வகித்த காலத்திலேயே விவகாரத்தை அறிவித்தார்.விவகாரத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அடுத்த வாரம் இருவரும் ஒன்றாக விடுமுறையை கழிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.