மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுககு அனுமதி மறுப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(13) காலை ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்> பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலாவின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.
பாதுகாப்பு தொடர்பான விடயங்கள்
இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கூட்டம் ஆரம்பிக்கவிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடக சந்திப்பு நடைபெறும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பேசப்படும் நிலையிருந்த காரணத்தினால் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லையென அரசதரப்பு தகவல்கள் தெரிவித்தன.
எனினும் பொலிஸார் தொடர்பான விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளதன் காரணமாக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லையென தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






