இராமர் குறித்த வைரமுத்துவின் சர்ச்சையான பேச்சுக்கு கம்பவாரிதி கடும் எதிர்ப்பு
சென்னை கம்பன் விழாவில் “ராமன் புத்தி சுவாதீனம் இல்லாதவன்” என கவிஞர் வைரமுத்து பேசியதற்கு ஆன்மீகப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய கவிஞர் வைரமுத்து, “சீதையப் பிரிந்த ராமன், செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான்; புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம் குற்றமாகாது என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.
ராமன் என்ற ஒரு குற்றவாளி, முற்றிலும் விடுவிக்கப்படுகிறான்” என பேசியிருந்த நிலையில், இது மிகப் பெரும் சர்ச்சையானது.
இராவணனை நல்லவன் என்று
இந்த நிலையில் அதே கம்பன் விழாவில் பேசிய ஆன்மீகப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ், வைரமுத்துவின் கருத்தை கடுமையாக மறுத்து பேசியுள்ளார்.
இராவணனை நல்லவன் என்று சொல்கிற ஒரு அமைப்பை இந்த சமுதாயத்தில் உருவாக்கக் கூடாது என எல்லோரிடமும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இராமனிடத்தில் பிழைகளைக் காட்டுவீர்களா என்றால் காட்டலாம்.
இவ்வளவு கெட்டவர்கள் எங்களுக்குள் இருக்கும் போது ஒருவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?
ஆகவே, அவனிடத்திலும் ஒரு குற்றத்தைக் காட்டுவேன் என நினைக்கிற மன இயல்பு இருக்கிறதே அது நம்முடைய தாழ்ச்சியின் அடையாளம்.
உயர்ந்து நின்ற ஒரு பாத்திரத்தை
இராமன் குற்றம் செய்தானா? என்றால், இராமன் குற்றம் செய்தது போல கம்பன் காட்டினானே தவிர இராமன் குற்றம் செய்யவில்லை.
குருவார்த்தை மீறினான், பெண்ணை கொலை செய்தான், அதன் பின்னர் வாலியை கொலை செய்தான், சூர்ப்பநகையோடு விளையாடினான், சீதையை தீக்குளிக்க வைத்தான் என்று சொல்கிற அனைத்தையும் குற்றமாக சொல்ல முடியாது.
ஒரு விழா எடுத்து ஒரு சபை அமைத்து ஒரு பேச்சாளனை பேச வைத்தது, உயர்ந்து நின்ற ஒரு பாத்திரத்தை தாழ்த்தி பேசுவதற்காகத்தானா? அதற்காகவா இத்தனையையும் நாம் செய்கிறோம்?
இராமன் மீது குற்றம் வருகிற ஒவ்வொரு காட்சியையும் நாம் எப்படி பார்க்க வேண்டும் எனில் இவன் பிழை செய்ய நியாயமில்லை என்றுதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
