இலங்கையில் அதிரடியாக கால்பதித்த மொசாட்..! முஸ்லிம்களை வெளியேறச் சொன்ன ஜனாதிபதி
பலஸ்தீனர்களது உரிமைகள் சம்மந்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 242ஆவது தீர்மானத்திற்கு இஸ்ரேல் இணங்காததை காரணம் காண்பித்து 1970ஆம் ஆண்டில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அரசாங்கம் இலங்கையில் இஸ்ரேலிய தூதரகத்தை மூடியிருந்தது.
இதன்போது இஸ்ரேலுடனான தனது தொடர்பை துண்டித்தது மட்டுமல்ல தனது செயல் பற்றி இலங்கை சர்வதேச அளவில் பெருமையையும் வெளிக்காட்டியிருந்தது.
அந்த காலப்பகுதியிலேயே இஸ்ரேலிய பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்கு கடுமையான தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழ் விடுதலை அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கொரில்லா தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுடன் இராணுவப் பேச்சை மீண்டும் கேட்டுச் சென்றதுடன் 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக இண்ரேலிய இராணுவத்தையும் களமிறக்கியது.
இந்நிலையில் இலங்கையில் இஸ்ரேல் கால்பதித்ததை தொடர்ந்து பாரிய எதிர்ப்பலைகள் நாடு முழுவதும் உருவானது. குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள் தமது அதிருப்தியை பல வழிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அரசாங்கத்திற்கு தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேறுமாறும் ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை வெளிப்படுத்தி வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



