சர்ச்சைக்குரிய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தயார்: ஜோன்ஸ்டன் திட்டவட்டம்
அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணைக்கு அமைய தான் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.
மனு தாக்கல்
அத்துடன் தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொள்ளைப் புலனாய்வுப் பிரிவில் நாளை முன்னிலையாகி , சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை வழங்கத் தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான, மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam