கம்மன்பில வெளியிட்ட அறிக்கைக்கு அநுர அரசாங்கம் வழங்கியுள்ள பதில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உரிய விசாரணைகள் நடத்தப்படும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பல பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

எனினும், குறித்த அறிக்கையானது அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றதன் காரணமாக நாங்கள் அதனை நிராகரிக்கின்றோம்.

எவ்வாறாயினும் தமது அரசாங்கத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
you may like this
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam