பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு
கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ மஹோனியுடன் இணைந்து நேற்று(22) நடைபெற்ற இச்சந்திப்பில், மலையகச் சமூகத்தின் முன்னுரிமைகள், டித்வா புயலால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இச்சந்திப்புத் குறித்துத் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், அவர்களின் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.