சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் அண்டர்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, ஜூலை 10ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் அண்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள்
அண்டர்சன் தனது முகநூல் குறிப்பில், “எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாயபோது எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

41 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் இவர் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 ரி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan