சுதந்திர கட்சி தலைமையகம் முன் பலத்த பாதுகாப்பு
கொழும்பு (Colombo) - டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையகம் முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு மேலதிக பொலிஸ் அணியினரும் நீர்த்தாரை இயந்திரங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (12.05.2024) காலை நடைபெற்ற மைத்திரி தரப்பு செயற்குழுக்கூட்டத்தின் போது மைத்திரிபால சிரிசேன கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகினார்.
புதிய தலைவர்
அதனையடுத்து, மைத்திரி தரப்பு செயற்குழு உறுப்பினர்கள், விஜயதாச ராஜபக்சவை கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், சுதந்திரக்கட்சியின் மைத்திரி தரப்பினால் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ச, சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு வருகை தரும்போது, அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri