கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர்
இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கெட்டலியன்பல்ல, கஹங்கம, இரத்தினபுரி முகவரியை சேர்ந்த 61 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இக்கொலை இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடூரமான முறையில் கொலை
அலவங்கினால் தலையில் தாக்கி, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட நபர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளரின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam