சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தல்
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றிய செயலாளர் சோதிராசா சிந்துஜன் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதனடிப்படையில் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியபடுத்துகின்றோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
கறுப்பு ஐனவரி நினைவேந்தல்
மேலும், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் நீதி கோரி "கறுப்பு ஐனவரி" நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் தலைமையில், குறித்த நினைவேந்தல் மற்றும் கலந்துரையாடல் யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊடக சுதந்திரம், நிகழ்நிலை காப்பு சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம் ஊடகங்களில் செலுத்தவுள்ள தாக்கம் தொடர்பாகவும் சட்டத்தரணி,ஊடகவியலாளர், துறைசார் நிபுணர்களின் உரையும் இடம்பெற்றது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |