சனத் நிஷாந்த தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்து: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து அவதூறான கருத்துகளை ஏற்க முடியாது என்றும், சமூக வலைதளங்களில் மிக மோசமான கருத்துக்களை பதிவிடுகின்றவர்கள் தற்போது கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் ஒரு கட்சியை சார்ந்தவர்கள் போலி கணக்குகளின் ஊடாக இந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்திருந்தார்.
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
