யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும் உகந்தை மலை திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை தடுத்து நிறுத்த கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
குறித்த போராட்டம், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பிரதான நுழைவாயில் முன்பாக நேற்று (04.06.2025) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், இந்த மண் எங்களின் சொந்த மண், மயிலத்தமனை மாதவமடு எங்கள் சொத்து, கலாசார அழிப்பை நிறுத்து, தழிழரின் நிலம் தமிழருக்கு, நிலம் எங்கள் சொத்த அதனை பறிக்க முனையாதே, விவசாயிகளை விடுதலை செய் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam