குருந்தூர்மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
முல்லைத்தீவு (Mullaitivu) - குருந்தூர்மலை பகுதியில், கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருந்த குறித்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொல்பொருள் தளம்
இந்நிலையில், இன்று (15.05.2025) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
குறித்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்ட புகாரில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 15 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
