தையிட்டி போராட்டத்தை புறந்தள்ளி ஆடைக்கடையில் முட்டி மோதிய மக்கள்
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு விவகாரத்தில் நீதி கோரி நீண்டகாலமாக பலர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டி விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடக்க, அதே நேரத்தில் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியமை தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய அரசியல் வீழ்ச்சியை அப்பட்டமாகக் காட்டுகின்றது.
நிலம் பறிபோகும் ஒரு கட்டத்தில் வீதிக்கு வராத மக்கள், ஒரு வணிக நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்குப் பின்னால் ஓடுவது பலர் மத்தியில் அதிருப்தியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசியல் களத்தில் நிகழும் இது போன்ற முக்கிய நகர்வுகளை ஆராய்கின்றது எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,