சுவிட்சர்லாந்து தீ விபத்து! உயிரிழந்தோர் குறித்து வெளியான தகவல்
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் கடந்த (1)ஆம் திகதியன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு,116 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக (2020 முதல் 2025 வரை) எந்தவிதமான பாதுகாப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என மேயர் நிக்கோலஸ் ஃபெராட் ஒப்புக்கொண்டுள்ளார்.
வழக்கு
போத்தல்களில் இணைக்கப்பட்டிருந்த 'ஸ்பார்க்லர்' (Sparklers) பட்டாசுகள், கூரையில் ஒட்டப்பட்டிருந்த சத்தத்தைக் குறைக்கும் 'ஃபோம்' (Foam) மீது பட்டதே இந்த பெருந் தீப்பரவலுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அனைத்து மதுபானசாலை மற்றும் களியாட்ட விடுதிகளில்'ஸ்பார்க்லர்' பட்டாசுகளைப் பயன்படுத்த மேயர் தடை விதித்துள்ளார்.

10,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய வெறும் 5 பேர் மட்டுமே கொண்ட குழு இருந்ததே இந்த அலட்சியத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுபானசாலை உரிமையாளர்களான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேக்ஸ் மற்றும் ஜெசிகா மோரெட்டி (Jacques and Jessica Moretti) மீது 'அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam