மதுரோ கைது குறித்து அம்பலப்படுத்திய ட்ரம்ப்
வெனிசுவேலாவின் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்த சில விபரங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அம்பலப்படுத்தியுள்ளார்.
மதுரோவை கைது செய்ய முன்னதாக அந்நாட்டின் முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த உயர் அபாய இராணுவ நடவடிக்கையை ட்ரம்ப் பகிரங்கமாக கொண்டாடியுள்ளார்.
மிகவும் பயங்கரமான இராணுவம்
இந்த இராணுவ நடவடிக்கை, உலகிலேயே மிகவும் பயங்கரமான இராணுவம் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை நிரூபிப்பதாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நடைபெற்ற குடியரசுக் கட்சி கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நிலத்தில் நிறைய வீரர்கள் இருந்தனர். ஆனால் அந்த நடவடிக்கை அசாதாரணமானது. தந்திர ரீதியாக மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என ட்ரம்ப் விபரித்துள்ளார்.
இந்த இராணுவ நடவடிக்கையின் சில விவரங்களை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ட்ரம்ப் பகிர்ந்து கொண்டார்.
வெனிசுவேலாவுக்குள் நுழைவதற்கு முன்
அதன்படி, அமெரிக்க படைகள் வெனிசுவேலாவுக்குள் நுழைவதற்கு முன், நாட்டின் முக்கிய பகுதிகளில் மின்சாரத்தை துண்டித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மதுரோ இருந்த வளாகத்தை அணுகும்போது, அமெரிக்க இராணுவத்திற்கு அதிர்ச்சி தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் நினைத்துப் பாருங்கள் – எங்கள் பக்கம் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் எதிர்த்தரப்பில் பல உயிர்ச் சேதங்கள் பதிவானதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பிய ஜனநாயகக் கட்சியினரை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
மதுரோ கைது நடவடிக்கைக்காக தன்னை பாராட்டுவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |