குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் போராட்டம் வெடிக்கும் : கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம்
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சரவணகுகானந்தன் சிவகுமார் வத்திராயன் பகுதியில் அவரது வீட்டில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் ஜனநாயகமுறையில் போராட்டத்தை முன்னெடுப்போம் என யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் இவ் ஊடகசந்திப்பின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் செபமாலை அன்ரன் செபராசா மற்றும் சம்மேளனத்தின் உறுப்பினர் செல்லத்துரை நற்குணம் ஆகியோர் நேற்றையதினம்(22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை போதே இந்ந விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் போது அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐந்து தடவைகளுக்கு மேல் கடற்றொழிலாளர் சமூகங்கள் சந்திப்பதற்கு மஜகர் வழங்கியும் எம்மை சந்திக்க விரும்பாத ஜனாதிபதி வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என கடற்றொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்ன லிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்தார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |