உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஆதாரங்கள் அழிப்பு - சபையில் அம்பலப்படுத்திய ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் படுகொலைக்கு பின்னால் உள்ள உண்மையை அரசாங்கம் வெளிக் கொணரும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன.
புதிய ஆதாரங்கள்
ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மைகள் வெளிக்கொணரப்படும்.
குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர இரவும் பகலும் உழைத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |