யாழ். பொதுநூலகத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் (Video)
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வருகைதந்து நூலகத்தினை பார்வையிட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்(sarah hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்றையதினம்(23.05.2023) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்
விஜயத்தின் போது இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |