யாழ்.பல்கலைக்கழக விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய தூதுவர் (Photos)
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தை இன்றையதினம் (23.05.2023) மேற்கொண்டுள்ளார்
இதனையடுத்து பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் மற்றும் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கல்வி சார் உடன்படிக்கைகள்
இதேவேளை சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்பின் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறையையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
