அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!
யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.
கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.
வளலாய் மேற்கு, அச்சுவேலி பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan