நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்
16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கும்,தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வத்தளை பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் சட்ட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் மனித உரிமைகள் பிரிவுக்கும், எல்பிட்டிய பொலிஸ் பிரவின் பொறுப்பதிகாரி கொஸ்கொடை பொலிஸ் நிலையத்திற்கும், வாதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
16 அதிகாரிகள்
மத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி வாதுவை பொலிஸ் நிலையத்திற்கும், அதிவேக வீதி பொலிஸ் பிரிவிலிருந்தவருக்கு அதிவேக வீதி பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கும், பன்சியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பன்சியகம பொலிஸ் நிலையத்திற்கும், பொத்தப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கும், கம்பளை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொத்தப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கும், தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கும், கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தருமபுரம் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தினுடைய நிர்வாக பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. என் டி. பி.சி. லிங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam