வவுனியாவில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகள்
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் இதுவரை 6 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வவுனியாவில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் இன்று (09) கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் முறைப்பாடுகள்..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை எந்தவித குழப்பங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதுவரைக்கும் 6 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆறும் சிறிய முறைப்பாடுகள். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பானது. தேர்தல் வன்முறை தொடர்பில் எவையும் பதிவாகவில்லை. அதில் 4 முறைப்பாடுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டுளளது. இரு முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
