இஸ்ரேலுடனான மோதல் குறித்து ஈரான் அளித்துள்ள விளக்கம்
தற்போதைய போர் ஈரானின் விருப்பமல்ல, மாறாக தங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான "அவசியமான போர்" என்று ஈரான் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பக்ஹேய், குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், பிராந்திய பதற்றங்களை உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்கப்பட்டபோது, தற்போது இராணுவ மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், தற்காப்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பற்றவை என்று அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்
இதற்கிடையில், துருக்கி, சைப்ரஸ் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
இத்தகைய தாக்குதல்கள் ஈரான் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்த எதிரிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், ஈரானியத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் தொடர்ந்து ஈரானின் கியூம் மற்றும் தெஹ்ரான் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலால் தெஹ்ரானில் நச்சுப் புகை பரவியுள்ள நிலையில், இஸ்ரேலும் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. மத்திய இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலால் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் ஈரானிடமிருந்து வந்த புதிய ஏவுகணை அலையை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் பிராந்தியத்தில் நட்புறவைப் பேண விரும்புவதாக ஈரான் கூறினாலும், பிற நாடுகளின் நிலப்பரப்பு தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால், தற்காப்புக்காகப் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் பக்ஹேய் வலியுறுத்தியுள்ளார்.
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam