ரணில் - ராஜபக்ச கூட்டணியில் கடத்தல் சூத்திரதாரியாகிய பிள்ளையான்!

Dharu
in பாதுகாப்புReport this article
ரணில் - ராஜபக்ச கூட்டணியுடன் இணைந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடத்தல் சூத்திரதாரி
“கிழக்கில் உள்ள அனேகமான புத்திஜீவிகள் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறான கடத்தல்களின் சூத்திரதாரியாக கருதி பிள்ளையான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பல குற்றங்களை பிள்ளையான் செய்துள்ளார்.
மேலும் ரணில் - ராஜபக்ச கூட்டணியுடன் இணைந்து கடத்தல் குற்றச்சாட்டுக்களிலும் ஈடுபட்டுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
அவ்வாறான ஒரு சூத்திரதாரி இந்த உயரிய சபையிலும் இருந்துள்ளார்.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு இவர்கள் போன்றோர் எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.
இது போலவே பலரால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது அதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
