யாழில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா

Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Aug 11, 2025 12:03 PM GMT
Report

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025 நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கண்காட்சி ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை 3 தினங்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் கண்காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ஒழுங்கமைக்கப்பட உள்ளது.

புத்தக திருவிழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இன்று(11) நடைபெற்ற போதே ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர்.

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம்

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம்

புத்தக திருவிழா

மேலும் தெரிவிக்கையில், புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்று வருகின்றன. நாம் நமது உடலுக்கு உடற்பயிற்சி செய்வது போல வாசிப்பு என்பது நம் மனதுக்கும் புத்திக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப இந்த உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவையும் சமூகப் பொறுப்பும் நமக்கு உள்ளது.

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா | Jaffna International Book Festival

அந்த வகையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பைமேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை விலைக்கழிவுகளுடன் அவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு. இதனை கருத்தில் கொண்டு வருடம் தோறும் புத்தகத் திருவிழா ஒன்றை நடாத்த வேண்டும் எனும் முயற்சியின் முதல் படியாக கடந்த வருடம் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இனை சிறப்பாக நடாத்தி இருந்தோம்.

அனைத்து தரப்பினரதும் பெரும் வரவேற்பை பெற்று சிறப்பான புத்தக திருவிழாவாக அது அமைந்தமையானது இவ்வருடம் மேலும் சிறப்பாக இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவினை ஒழுங்கமைக்க எம்மை ஆர்வப்படுத்தியது. குறிப்பாக இப் புத்தக திருவிழாவானது இலாபநோக்கமற்ற முறையில் நடாத்தப்பட உள்ளது.

உள்நாட்டிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகள்

பொதுமக்கள், வாசகர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் ஆகிய நீங்கள் ஒவ்வொருவரும் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025 இற்கு வருகை தருவதன் மூலம் பல்தரப்பட்ட பன்மொழி பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கும் கொள்வனவுகளை மேற்கொள்வதற்கும் மட்டுமன்றி பிரபல எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடவும் புத்தக வெளியீடுகளில் பங்குபெறல் மற்றும் நாடக அரங்குகளை கண்டு மகிழ்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா | Jaffna International Book Festival

எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தக திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகமும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனும் கலந்துகொள்கிறார்.

மூன்று தினங்களும் புத்தக கண்காட்சியை தாண்டி பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

கண்டுக்கொள்ளப்படாத தென்னிலங்கை குற்றவாளிகள்! வடக்கை குறி வைக்கும் இராணுவம்

கண்டுக்கொள்ளப்படாத தென்னிலங்கை குற்றவாளிகள்! வடக்கை குறி வைக்கும் இராணுவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US