சஜித்தின் ஆடையை பார்த்து கிண்டல் செய்த சபாநாயகர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கிண்டல் செய்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் நோக்கில் தாம் இந்த ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து வந்ததாக நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இன்றைய தினம் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து நாடாளுமன்றத்தில் பிரசன்னம் ஆகியிருந்தார்.

இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே நீங்கள் அழகாக ஆடை அணிந்து வந்திருக்கிறீர்கள் என சபாநாயகர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறெனினும், பெண்கள் மீதும் சிறுவர்கள் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு ஆடை அணிந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் வயது குறைந்த சிறுமியர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாவதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் ஊழிய படையில் பெண்களுக்கான பங்களிப்பு மிகுந்த குறைந்த அளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை வலுவூட்டுவதற்கும் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதற்கும் சிறுவர்கள் தலைமுறையினரை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
பிக்பாஸ் 10 புரொமோ: வினோத் பாபு குடும்பத்தை தொடர்ந்து என்ட்ரி கொடுத்த லட்சுமி ப்ரியா பேமிலி... Cineulagam