யாழ். வைத்தியசாலை நோயாளர்களின் நிலை தொடர்பில் வெளியிட்ட தகவல்!
யாழ். (Jaffna) ஆதார மற்றும் போதனா மருத்துவமனை இரண்டுக்கும் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என மக்கள் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் கூறுகையில், "தெல்லிப்பழை மற்றும் யாழ். போதனா மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு பணியாளர்களைக் கொண்டிருந்தாலும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் போதனா மருத்துவமனையின் கீழ் வரும் புற்றுநோய் பிரிவு ஆகிய இரண்டும் அடிப்படையில் வெவ்வேறானவை.
எனவே அங்குள்ள மருத்துவர்கள் தங்கள் சேவைகளை பயனுள்ளதாக வழங்குவதற்குரிய பரிந்துரைகளை எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி புற்றுநோய் பிரிவு சேவைகளை நிர்வகிப்பதற்கென தனி பணிப்பாளர் மற்றும் கணக்காளர் தனி மேட்ரன் தேவையென எதிர்பார்க்கிறார்கள். புற்றுநோய் சேவைகளை நிர்வகிக்கும் அனைத்து ஊழியர்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |