எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி கவலை
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன், தனது முன்னாள் கணவரும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவுநருமான பில் கேட்ஸ் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து வெளியாகியுள்ள புதிய ஆவணங்கள் தன்னை அளவில்லா சோகத்தில் ஆழ்த்தியதாக மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பில் கேட்ஸை விவாகரத்து செய்த மெலிண்டா, சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அந்த குழப்பம் அனைத்திலிருந்தும் விலகி இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான தொடர்புகள்
எப்ஸ்டீன் ஆவண விவகாரத்தில் இன்னும் பதில் கிடைக்க வேண்டிய கேள்விகள் இருந்தால், அவற்றிற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் அது தமது பொறுப்பு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
அதில் என் முன்னாள் கணவரான பில்கேட்ஸூம் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நீண்டகால தொடர்புகள் ஏற்கனவே பதிவாகியுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் எப்ஸ்டீன் விசாரணை தொடர்பான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்க ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

2013 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும், எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கணக்கில் சேமிக்கப்பட்ட சில வரைவு குறிப்புகளை யார் எழுதியது என்பது தெளிவில்லை. ஆனால் அவை, பில் கேட்ஸை குறிவைத்து “துரோகம்” குறித்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த குறிப்புகளில் கேட்ஸ் – மெலிண்டா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள், வணிக ஒப்பந்தங்கள், பாலியல் நோய் குறித்த கவலைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை, உண்மையற்றவை. இந்த ஆவணங்கள் எப்ஸ்டீன், கேட்ஸுடன் தொடர்ந்த உறவு இல்லாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை மட்டுமே காட்டுகின்றன. அவதூறு செய்ய அவர் எந்த அளவுக்கு முயன்றார் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது என கேட்ஸ் தரப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் தன்னிடம் தானே ஒரு மின்னஞ்சல் எழுதியதாக தெரிகிறது. அது அனுப்பப்படவே இல்லை; அதில் கூறப்பட்டவை பொய்யானவை. அவருடன் கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வருந்துகிறேன்; அதற்காக மன்னிப்பும் கேட்கிறேன்” என பில் கேட்ஸ் அவுஸ்திரேலிய ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிய தகவல்களை வாசித்தபோது, தனது திருமண வாழ்க்கையில் மிகுந்த வேதனையை அளித்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன என்று மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri