இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அரிய வாய்ப்பு
பிரித்தானியாவில் வெளிநாட்டு பெண்கள் STEM (Science, Technology, Engineering, Mathematics) துறைகளில் உயர் கல்வி பெறுவதற்கான முழுமையாக நிதியுதவி செய்யப்பட்ட புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த scholarship, பெண்களுக்கு பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கல்வி பெறும் வாய்ப்பை வழங்கவுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று
புலமைப்பரிசில் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகள், முழு கல்விக் கட்டணம், வாழ்வாதார செலவுகள், பயணச் செலவுகள் ஆகிய அனைத்தையும் இலவசமாக பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் கல்வி பெறும் போது தேவையான ஆதரவு மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த scholarship-ன் முக்கிய நோக்கம், பெண்களை STEM துறைகளில் அதிகமாக ஈர்க்கவும், அவர்களின் திறமைகளை உலகளவில் வெளிப்படுத்தவும் உதவுவதாகும்.
குறிப்பாக, கணினி அறிவியல், பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், தரவு அறிவியல், புதுமையான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பெண்கள் அதிகமாக பங்கேற்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விவரங்களைப் பெறலாம்.
விண்ணப்பங்கள் 2026 மார்ச் மாதம் வரை ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam