பொதுமக்களின் பேருந்தில் சிக்கிய இராணுவ புலனாய்வாளர்! வெளிவரும் திடுக்கிடும் இரகசியம்
நாட்டிலே நேற்றையதினம்(04.02.2026) சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த தினத்தை கரி நாளாகவே முன்னெடுத்து வருகின்றனர்.
பெப்ரவரி 4 என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றில் கரி நாளாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதியில் பல மாவட்டங்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே மிகப்பிரதானமான போராட்டமும் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் மற்றுமொரு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு அண்டிய பிரதேசங்களில் இருந்து போராட்டத்திற்கு மக்கள் பேருந்துகளில் வருகை தந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த பேருந்தில் இருந்த பொது மக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து பல கெடுபிடிகள் நிகழ்த்தப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினுடைய முக்கியஸ்தரான செல்வராணி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri