வட மாகாண சுகாதார பணிப்பாளர் நியமனம்! அளுநர் ஜீவன் தியாகராஜாவின் நிலைப்பாடு
வட மாகாண சுகாதார பணிப்பாளரின் புதிய நியமனம் குறித்து மத்திய சுகாதார அமைச்சு தன்னிடம் எதுவும் கலந்துரையாடவில்லை என வட மாகாண அளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நியமனத்திற்கு தகுதியானவர்கள் வட மாகாணத்தில் இருக்கும் நிலையில் கொழும்பிலுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து எமது பிராந்திய செய்தியாளர் வட மாகாண ஆளுநரிடம் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்
அத்துடன் வடக்கு சுகாதார பணிப்பாளர் நியமனம் தொடர்பில் புதிய ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னரே தான் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் வெளிநாடு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருப்பதால் குறித்த விடயம் தொடர்பில் துறை சார்ந்த அமைச்சருடன் நேரில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண புதிய சுகாதார பணிப்பாளர்
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு மருத்துவ நிர்வாகத்துறை விசேட வைத்திய நிபுணர் திலிப் லியனகே (Dr. Dilip H Liyanage) கடந்த வாரம் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
