நீங்களாகவே வெளியேறுங்கள்: இல்லையேல் அதிகாரிகளின் முறைகேடுகள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும் -ஜீவன் தியாகராஜா

Northern Provincial Council Jeevan Thiyagaraja Northern Province of Sri Lanka
By Kajinthan Aug 07, 2022 09:06 PM GMT
Report

கடந்த காலங்களில் வடக்கு மாகாண நிர்வாகம் ஒரு சில அதிகாரிகளை திருப்திப்படுத்தும் முகமாககவே செயற்பட்ட நிலையில் தவறுகளை விட்ட அதிகாரிகள் தாங்களாகவே உணர்ந்து வெளியேறி மாகாண நிர்வாகத்தை வினைதிறனாக நடத்துவதற்கு வழி விட வேண்டும் என வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற நிர்வாக அதிகாரிகளின் மாற்றம் தொடர்பில் ஆளுநருடன் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

"வட மாகாணத்தில் கீழ்நிலை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மறைக்கப்பட்டு ஒரு சில மேல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் செயற்பட்டமை தமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

மாகாண சபைகள்

13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவான கட்டமைப்பு. வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் மாகாணத்தின் நிர்வாக விடயங்கள் சரிவர இடம்பெறுகிறதா என கண்காணித்தல் மற்றும் அரச சேவையின் ஊடாக பொது மக்களின் தேவைப்பாடுகள் அபிவிருத்திகளை உறுதி செய்தல் ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பு.

வடக்கு மாகாண நிர்வாகத்தில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ப்பில் திருப்தி அடைய முடியவில்லை. இலங்கையில் உள்ள ஏனைய எட்டு மாகாணங்களில் உள்ள விவசாய பணியாட்கள் எவ்வளவு காலம் பணியில் இருந்தார்கள் எவ்வளவு காலம் இருக்க முடியும் என ஆராய்ந்தால் வடக்கு மாகாணத்தின் செயற்பாடுகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது.

ஆளுநர் ஜீவன் தியாகராஜா

இலங்கையில் உள்ள விவசாய நிர்வாக தரம் 1 உள்ள அதிகாரிகளை மாகாண விவசாயப் பணிப்பாளராக மத்திய விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் நிர்வாக ஒழுங்குபடுத்தலின் கீழ் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.

அகில இலங்கை சேவை தரம் 11,111 ஆகிய பதவி வகிக்கும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதே துறையைச் சேர்ந்த மேலதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது அதன் பெறுபேறு என்ன.

வடக்கு நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட் முறைப்பாடுகளுக்கு எவ்வளவு காலத்துக்குள் மனித உரிமை ஆணைக்குழு தீர்வை வழங்கியுள்ளது.

வட மாகாண பிரத செயலாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட மாகாண நிர்வாக அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளை எவ்வளவு காலத்துக்குள் முடிவுறுத்தப்பட்டது சில முரண்பாடுகள் மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன? சில முறைப்பாடுகள் விசாரிக்கும் போது குற்றஞ் சாட்டப்பட்டவரின் பெயர் கூட குறிப்பிடாமல் விசாரணைகள் இடம் பெற்றமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஒரு சிலரின் தேவைக்கேற்ற சினேக பூர்வமாகச் செயற்படும் அதிகாரிகளினால் கீழ் நிலை அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது. ஆளுநர் இடமாற்றங்களை வழங்குவதில்லை பொதுமக்களால் அல்லது அதிகாரிகளினால் சக அதிகாரிகள் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை இடம்பெற்று உறுதிப்படுத்தப்படுமானால் பணிநீக்கம் அல்லது தண்டனை வழங்குதலை ஆளுநர் என்ற வகையில் மேற்கொள்வேன்.

விசாரணைக் குழு

வடக்கு மாகாணத்தில் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோப்புகள் என்னிடம் இருக்கின்ற நிலையில் மக்களை யாரும் திசை திருப்ப முடியாது. ஆளுநர் என்ற வகையில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் இவ்வளவு காலமும் தவறுகள் செய்தவர்கள் தாங்களாகவே இடமாற்றத்தைப் பெற்றுச் சென்று மாகாண நிர்வாகத்தை உரிய முறையில் மேற்கொள்ள வழிவிட வேண்டும்.

எனது பொறுமையாய் சோதிக்க விரும்பினால் விசாரணைக் குழு அமைத்து எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு முறைகேடுகள் தொடர்பில் பொது வெளியில் அம்பலப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவேன்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ரணிலின் சிம்மாசன பிரசங்கம் இந்தியாவின் இதயத்தில் அறையப்பட்ட ஆணி 


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US