யாழ்.அரச அதிபர் - உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (19) அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கியமைக்காகத் தமது நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம்.
தேர்தல் செயற்பாடு
அத்தோடு, தெரிவத்தாட்சி அலுவலருக்கு பக்கபலமாகவிருந்த விடயத்துக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜும் தேர்தல் செயற்பாடுகளில் சிறப்பாகக் கடமையாற்றியமைக்காக அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam