கொழும்பில் கட்டடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள பழைய கட்டடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சுவரின் ஒரு பகுதிக்கு அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஆரவத்தை, நமுனுகுல பகுதியை சேர்ந்த 38 வயதுடையவராகும். பழைய கட்டடத்தை இடிக்கும் போதே குறித்த நபர் அதில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஊழியர்களின் பாதுகாப்பு
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஒப்பந்ததாரரால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஓப்பந்தகாரர்களின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்துள்ளதென விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
