யாழில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு..!
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கடந்த 13ஆம் திகதி அன்று இடம்பெற்ற கோர விபத்தில் அகால மரணமடைந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த உதை பந்தாட்ட வீரர் யூட் மெரினின் இறுதி சடங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இறுதி சடங்கானது, உதை பந்தாட்ட வீரரின் பூத உடல் அவரின் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
கோர விபத்து
தொடர்ந்து யூட் மெரினின் பூத உடலால் செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதிக்கோல் அடிக்கப்பட்டு மோட்டார் வாகன பவணியுடன் தாழையடி புனித அந்தோனியார் ஆலயயத்திற்கு இரங்கல் திருப்பலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இரங்கல் திருப்பலியினை செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் ஒப்புக்கொடுத்தார் அ தனை தொடர்ந்து தாழையடி புனித அந்தோனியார் ஆலய சேமக்காலையில் யூட் மெரினின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி சடங்கு நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மற்றும் இலங்கை முழுவதும் இருந்து கால்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






