றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு விஜயம் செய்த யாழ். இந்திய துணைத்தூதுவர்
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணைக்கு யாழ்ப்பாணத்தின் புதிய இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி (Sri Sai Murali) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
புதிய முயற்சிகள்
அத்துடன் றீ(ச்)ஷா பண்ணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலா நடவடிக்கைகள் தொர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
மேலும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கி புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |