முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 24ஆம் திகதி தெற்காசிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் அவர் இலங்கைக்கும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் பின்னர் 24ஆம் திகதி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெறும் மாநாடு ஒன்றிலும் அவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
