ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உத்தரவிடுமாறு கோரி அனைத்து மதத் தலைவர்களாலும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணை
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பணச்சலவை உள்ளிட்ட இரண்டு விடயங்களின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 15 வயது பாடசாலை மாணவி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
