யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 15 வயது பாடசாலை மாணவி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 15 வயது பாடசாலை மாணவி தொடர்பான தகவல்கள் எதுவும், இதுவரை தெரியவரவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த வார இறுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் 15 வயது பாடசாலை மாணவியொருவர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்படட்டுள்ளார்.
இந்நிலையில் அன்று இரவு குறித்த பாடசாலை மாணவி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, பிறந்த நிலையில் குழந்தையை விட்டு விட்டு குறித்த பாடசாலை மாணவியும் அவரது தாயாரும் வைத்தியசாலையை விட்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கிய நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், தப்பியோடிய பாடசாலை மாணவி இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
குறித்த மாணவியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய சந்தேகநபர் யார் என்ற தகவல் வெளிவராத நிலையில், மாணவி தொடர்பில் தகவல்கள்
மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக சமூக ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை மாணவி வடமராட்சி கல்வி நிலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்றதாக தகவல்கள் வெளியாகியதோடு, இதுவரை கல்வி திணைக்கள அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam