பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு
பெண்கள் மீது தவறான புரிதலோடு செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து(Deshabandu Tennakoon) தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வுக்குழுக்களின் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளுமாறும், அதனை பொலிஸ் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரைவிடுத்துள்ளார்.
பெண்களுடன் முறைதவறிய உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் குறித்து முதற்கட்ட புலனாய்வு அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோன் உத்தரவு
அவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் குறித்த அதிகாரிகள் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து விலக்கப்படவுள்ளனர்.
மேலும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தங்களின் கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள வரும் பெண்களை, அதிகாரத்தைக் காட்டி ஏமாற்றி தவறான உறவை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சிலர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய அவ்வாறான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் குறித்து மாத்திரமன்றி, கனிஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் புலனாய்வு அறிக்கையொன்றைப் பெறுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
