பெண் பொலிஸாரின் விடுதிக்குள் அத்துமீறிய அதிரடிப்படை வீரர்: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
கொழும்பில்(Colombo) பெண் பொலிஸாரின் விடுதியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தகாத செயறஹபாட்டில் ஈடுபட முயன்ற விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொழும்பு கரையோர பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
ஒழுக்காற்று விசாரணைகள்
இந்நிலையில் நேற்று முன்தினம்(12) அவர் பெண் பொலிஸாரின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்திருந்ததுடன், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தவும் முயன்றிருந்தார்.
இதனையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த அதிரடிப்படை சிப்பாய், தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
