தொடருந்துடன் உழவு இயந்திரம் மோதி விபத்து : ஒருவர் பலி
பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்து ஒன்றில் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் காலி அருகே கொஸ்கொட, தூவேமோதர தொடருந்து குறுக்குக் கடவையில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
உழவு இயந்திரத்தில் பயணித்த பெந்தோட்டை பிரதேச சபையின் பணியாளரான இந்துருவ பிரதேசவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். லேண்ட் மாஸ்டர் உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
தூவேமோதர பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊடாக பயணிக்க முனைந்த போது தொடருந்து வருவதைக் கண்ட இரண்டு பேர் பாய்ந்து தப்பியோடி உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்தில் தொடருந்துக் கடவை அல்லது சமிக்ஞை விளக்குகள் இன்மையால் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
