அடிக்கலுடன் தடைப்பட்டு கிடக்கும் யாழ். கிரிக்கெட் மைதானம்! ஏமாற்றத்தில் அநுர
யாழ்ப்பாணம் மண்டைதீவில் கட்டப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டி ஒரு மாதம் ஆகியும், அங்கு எந்த கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறித்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு கிரிக்கெட் அதிகாரிகள் குழு ஒரு பேருந்து வழியாக யாழ்ப்பாணம் சென்றனர்.
ஆனால் அன்று அல்லது அதற்குப் பிறகு மைதான கட்டுமானம் தொடர்பான எந்த அதிகாரியோ அல்லது கண்காணிப்பாளரோ அந்த இடத்தைப் பார்வையிடவில்லை என கூறப்படுகிறது.
பருவகால மழை
வடக்குப் பகுதியில் எதிர்வரும் காலத்தில் பெய்யும் பருவகால மழையால் நிலம் சதுப்பு நிலமாக மாறும் என்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அங்கு எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி சமீபத்திய கிரிக்கெட் சங்கத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், அந்த மைதானங்களைக் கட்டுவதற்குப் பணம் இல்லை என்று தலைவர் கூறியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று மேற்கோள்காட்டியுள்ளது.
இருப்பினும், அடிக்கல் நாட்டும் நாளில் ஜனாதிபதி தனது உரையின் போது கேட்ட கேள்விக்கு பதிலளித்த கிரிக்கெட் தலைவர், இந்த ஆண்டு இறுதிக்குள் மைதானம் கட்டி முடிக்கப்படும் என்றும், மூன்று ஆண்டுகளில் ஒரு சர்வதேச போட்டியை நடத்தக்கூடிய அளவிற்கு இது அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதன்படி மழைக்காலங்களில் சதுப்பு நிலமாக மாறிவிடும் உப்பு மணல் நிறைந்த குறித்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான செலவு, ஒரு குறிப்பிட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்போது தெளிவாகிவிடும் என்று கிரிக்கெட் நிபுணர் ஒருவர் விளக்கியுள்ளார்.
இதன்படி கிரிக்கெட் மைதானங்களை நிர்மாணிப்பது அல்ல, மாறாக நாட்டின் நிர்வாக ஜனாதிபதியை கிரிக்கெட் வாரியம் கையாள்வதும், ஜனாதிபதியை யாழ்ப்பாண மக்கள் அறிந்தோ அறியாமலோ கையாள்வதும் இப்போது தெளிவாகத் தெரிந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் விளக்கியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



